தற்போதைய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீஸார் தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

DIN


சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய விடிய சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிடுப்பதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT