தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவை தமிழக அரசியலில் உச்சம் தொடவைத்த கடலூர்!

DIN


1982 இல் கடலூரில்  நடைபெற்ற மகளிர் மாநாட்டில், "ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்ற பேச்சே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்விற்கு முக்கியத் திருப்பமாக அமைந்தது. 

1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகர் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.

பேரணி திருவந்திபுரத்திலிருந்து தொடங்கிய பேரணி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிந்து, அங்கு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அதிமுக உறுப்பினராக ஜெயலலிதா சேர்ந்தார். மாநாட்டில் பலரும் உரையாற்றினர். அப்போது அங்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பேசிவிட்டாரா? எனக் கேட்டார். இல்லையென்றதும் அவர் பேசுமாறு அழைத்தார்.  

ஜெயலலிதா பேசுகையில், "ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்று பேசினார். அன்று தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் மேடைப்பேச்சு, தமிழகத்தில் ஆட்சிபுரியும் அளவுக்கு அவரை உயர்த்தியது. அதில் நானும் பங்கெடுத்தேன் என்பதே மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என பேசினார். 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "எனது அரசியல் கடலூரில்தான் தொடங்கியது' என நினைவுகூர்ந்தார்.

தமிழக அரசியலில் உச்சம் தொட்ட ஜெயலலிதாவின் வாழ்வில் கடலூர் மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என ஜெயலலிதாவே தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம் குறித்து சுட்டிக்காட்டியதை கூட்டத்தில் இருந்தோர் இன்றளவும் மறந்திருக்க முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT