தற்போதைய செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாகூரில் காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூரில் தொடர் காத்திருப்புப் போராட்டம்

DIN


நாகப்பட்டினம்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூரில் தொடர் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நாகூர் சியா மரைக்காயர் தெருவில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் போராட்டம் தொடங்கியது. நூற்றுக்கும் அதிகமான பெண்கள் உள்பட திரளானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT