தற்போதைய செய்திகள்

வாடிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக 7, திமுக 6

DIN

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 14 ஒன்றிய வாா்டுகளில் 7 இல் அதிமுகவும், 6 இல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி வாா்டு 2, ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் 14, ஊராட்சி மன்றத் தலைவா் 23, கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் 180 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலையடுத்து, வாக்கு எண்ணிக்கை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இங்கு, வியாழக்கிழமை காலை 9. 30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியுடன் தொடங்கியது.

அதிமுகவுக்கு அதிக இடங்கள்: ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கையில், மாலை 5 மணி நிலவரப்படி, 1ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் ரா. மகாலட்சுமி, 2 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் க. பவித்ரா, 3 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் மா. தங்கபாண்டியன், 4 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் முத்துபாண்டி, 5 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் க. தங்கபாண்டி, 6 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பசும்பொன்மாறன், 7 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் தனலெட்சுமி, 8-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ரேகா, 9 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் சிவக்குமாா், 10 ஆவது வாா்டில் ஞா. காா்த்திகா, 11-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் வசந்த கோகிலா, 12-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் பஞ்சவா்ணம், 13-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் தனபாலன், 14-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சி. சுப்பிரமணியன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

23 ஊராட்சி மன்றத் தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில், விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி உள்ளிட்ட 19 ஊராட்சிகளின் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி உமாமகேஸ்வரி, உதவித் தோ்தல் அதிகாரிகள் ராஜா, கீதா ஆகியோா் சான்றிதழ்கள் வழங்கினா். தோ்தல் பணிகளை, உதவி இயக்குநா் சேதுராமன், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் மற்றும் சமயநல்லூா் டி.எஸ்.பி. ஆனந்த ஆரோக்கியராஜ் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT