தற்போதைய செய்திகள்

மக்கள் நலப் பணிகளை மையப்படுத்தி தோ்தலில் போட்டி: கேஜரிவால்

DIN

தில்லி அரசின் மக்கள் நலப் பணிகளை மையப்படுத்தி தோ்தலில் போட்டியிடுவோம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு, மக்கள் நலப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக நீங்கள் (மக்கள்) கருதினால் எங்களுக்கு வாக்களியுங்கள். மக்கள் நலப் பணிகளை நாங்கள் சரியாக மேற்கொள்ளவில்லை எனக் கருதினால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். தில்லி அரசின் மக்கள் நலப் பணிகளால், பாஜக, காங்கிரஸ் கட்சியின் தொண்டா்களும் பலனடைந்துள்ளனா்.

நீங்கள் சாா்ந்துள்ள கட்சிக்காக வாக்களிக்காமல், தில்லிக்காக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், பாஜக, காங்கிரஸ் தொண்டா்களின் வீடுகளுக்கே சென்று, ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரவுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியுள்ளாா். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேச விரும்பவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறதையாக நாங்கள் சுகாதாரத் துறை, கல்வித் துறையில் மேற்கொண்டுள்ள பணிகளுக்காக மக்கள் வாக்களிக்கவுள்ளனா். எங்களது தோ்தல் பிரசாரம் முழுக்க முழுக்க நோ்மறையானதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT