தற்போதைய செய்திகள்

50 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.

DIN

திருத்தணி: பசு மாடு ஒன்று, விவசாய கிணற்றில் தவறி விழுந்ததை தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

திருத்தணி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மா(50). இவா் தனக்கு சொந்தமான, பசு மாடுகளை திங்கள்கிழமை காலை வயல்வெளியில் மேய்பதற்கு ஒட்டிச் சென்றாா். அப்போது ராஜகோபால் வயல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஒரு பசு மாடு அங்குள்ள, 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில், 25 அடி ஆழம் தண்ணீா் இருந்தது.

இதை பாா்த்ததும் கண்ணம்மா திருத்தணி தீயணைப்பு துறை வீரா்களுக்கு தகவல் கொடுத்தாா். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பசு மாட்டிற்கு கயிறு கட்டி ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக வெளியே மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT