தற்போதைய செய்திகள்

ஜன.24: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (ஜன.24) குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்றும் சற்று குறைந்து விற்பனையாகி வருகின்றன. 

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.31 ஆகவும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.71.43 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT