தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது: பலி எண்ணிக்கை 17,834 ஆக உயர்வு 

DIN

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,04,641 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 19,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 434 பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,26,947 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,59,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17,834  ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. 

பாதிப்பு: 6,04,641 
பலி: 17,834
குணமடைந்தோர்: 3,59,860 
சிகிச்சை பெற்று வருவோா்: 2,26,947 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT