தற்போதைய செய்திகள்

விரக்தி: சீர்காழி அருகே வயதான தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை

DIN

சீர்காழி: சீர்காழி அருகே விரக்தியில் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீன்வியாபாரி அருள்சாமி(70), அவரது மனைவி பாக்கியவதி(65). இவர்களுக்கு இரு மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி சென்னையிலும், மகள் திருமணமாகி நெய்த வாசல் உள்ளூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர். வயதான பெற்றோரை அவரது மகள் அவ்வபோது சந்தித்து வந்தார். ரத்தக் கொதிப்பு , நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகளை சென்று பார்க்க முடியாமலும், அவர்களும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமையில் வாழ்ந்து வந்த வயதான தம்பதியினர் மன உலைச்சலில் விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு காவலர்கள் வயதான தம்பதியரின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தாய்-தந்தை இறந்ததை அறிந்து வந்த மகன்களையும் அவர்களது குடும்பத்தாரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அதே மருத்துவமனையில் தனிமைபடுத்தினர். இதனால் இறந்தவர்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT