முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 22 ஜூலை, 2020 at 3:29 PM
Kerala-gold-scam
பகிர்:

கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி நகரைச் சேர்ந்த ஹம்சத் அப்துல் சலாம் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொச்சியில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

கடத்தப்பட்ட தங்கத்தை வாங்குவதற்காக சலாம் தனது பணத்தைச் செலவிட்டுள்ளார் என அதிகாரி ஒருவர் கூறிவுள்ளார்.

ஏற்கெனவே மூன்று முக்கிய குற்றவாளிகளான சரித், ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ.வின் காவலில் உள்ள நிலையில் நான்காவதாக சலாமை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.