தற்போதைய செய்திகள்

பிரேசில் ஒரே நாளில் 65,339 பேருக்கு கரோனா

DIN

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புதன்கிழமை ஒரே நாளில் 65,339 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 22,31,871 ஆக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 1,293 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து பிரேசிலும் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவுகிறது. 

உலம் முழுவதும் 1,53,82,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,30,370 பேர் பலியாகியுள்ள நிலையில், பிரேசிலில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22,31,871 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு இதுவரை 82,890 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை15,32,138 பேர் குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 6,08,525 பேர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டின் அதிபருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பிரேசில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT