தற்போதைய செய்திகள்

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டம்: பிரதமர் இன்று அடிக்கல்

DIN


புது தில்லி:  மணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 23) அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம், மணிப்பூரின் கிரேட்டர் இம்பால் திட்டப் பகுதியில் எஞ்சியிருக்கும் குடியிருப்புகளுக்கும், மொத்தமுள்ள 16 மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 2,80,756 வீடுகளுக்கும் குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

"2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்தின் இலக்கை எட்டுவதற்கு இந்த குடிநீர் விநியோகத் திட்டம் உதவும்' என்று பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் சுமார் ரூ. 3,054.58 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்ட உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT