தற்போதைய செய்திகள்

தேனியில் சிறைக் காப்பாளர் உள்பட 171 பேருக்கு கரோனா

DIN

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை பெரியகுளம் கிளைச் சிறை காப்பாளர், பயிற்சிக் காப்பாளர் உள்ளிட்ட 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் கிளைச் சிறை காப்பாளர், பெண் பயிற்சி சிறை காப்பாளர், தேனியைச் சேர்ந்த  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த தனியார் பல் மருத்துவர், சின்னமனூரைச் சேர்ந்த உத்தமபாளையம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், ஆண்டிபட்டி, தேவாரம் பேரூராட்சிகளில் பணியாற்றும் 2 பணி மேற்பார்வையாளர்கள், கொண்டமநாயக்கன்பட்டி தனியார் வங்கி ஊழியர், திண்டுகல் மற்றும் மதுரையிலிருந்து தேனிக்கு வந்திருந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 171 பேருக்கு ஓரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர், உத்தமபாளையம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்த 67 வயது முதியவர், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த க.மயிலை தெற்கு ஒன்றிய அதிமுக செயலரின் மனைவி என 3 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT