கோரிக்கையை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர் நிர்வாண போராட்டம் 
தற்போதைய செய்திகள்

சாத்தூர்: கோரிக்கையை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர் நிர்வாணப் போராட்டம்

தனது கோரிக்கையை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர்  நீதிமன்றம் முன்பு நிர்வாணமாக அமரந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

தனது கோரிக்கையை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர் நீதிமன்றம் முன்பு நிர்வாணமாக அமரந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் சாத்தூரில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வித பணிகளும் இல்லாத காரணத்தால் தனது வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் தனது வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டியும் மணிகண்டன் செவ்வாய்கிழமை காலை சாத்தூர் மெயின்ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நிர்வாணமாக கையில் மனுவுடன் போராட்டத்தில் ஈடுட்டார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த சாத்தூர் நகர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் பேச்சுவார்ததை நடத்தி பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது, தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 31ம் தேதி முதல் நீதிமன்றம் முன்பு சாகும் வரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கறிஞரின் நிர்வாண போராட்டத்தால் மெயின்ரோட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்படட்து. மேலும், இந்த வழக்கறிஞர் தனது தாய் மற்றும் மனைவியை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் மணிகண்டன் மீது உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

அநீதி, அராஜகம்....திமுக பற்றிய விஜய்யின் திருக்குறள்! | TVK 3rd year anniversary

வேல்முருகனின் பாடலுக்கு விஜய் நடனம்! | TVK 3rd year anniversary

SCROLL FOR NEXT