தற்போதைய செய்திகள்

கிழக்கு கடற்கரை ரயில்வே தலைமையகத்தில் திறக்கப்பட்டது சைபர் செல்

PTI

இணையப் பயணச் சீட்டில் வரும் மோசடிகளை விரைவாக கண்டறிந்து விசாரிப்பதை உறுதி செய்வதற்காக புவனேஷ்வரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே  தலைமையகத்தில் இணையப் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை ரயில்வே பொது மேலாளர் வித்யா பூஷண் வியாழக்கிழமை இணையப் பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பூஷண் கூறுகையில்,

அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை உள்ளடக்கிய வெள்ளை காலர் குற்றங்களை சிறப்பாகக் கண்டறிந்து வழக்குத் தொடர இணையப் பாதுகாப்பு மையம் நிச்சயமாக உதவும்.

இந்த மையத்தில் அதிநவீன மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், அதை கையாள பயிற்சி பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் இணைய மோசடி வழக்குகளைச் கையாள பாதுகாப்புப் பணியாளர்களுக்கு கூடுதல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை முன்கூட்டியே பதுக்கி வைக்கும் வகையில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத மென்பொருள்களை கண்டறியவும் இந்த செல் பயனுள்ளதாக இருக்கும், என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT