நாமக்கல்: நாமக்கல்லில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 1,200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதன்கிழமை தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. ஆர். என்.ராஜேஷ் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்தி செல்வன் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் மூத்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அவர் கட்சி கரை வேட்டிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கட்சியினர், மூத்த நிர்வாகிகள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அச்சக தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 1200 பேருக்கு மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்புகள், முட்டைகள் அடங்கிய பைகளை காந்திசெல்வன் அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.