தற்போதைய செய்திகள்

கரோனா தொற்றுக்கு எதிரான ஆய்வில் மீண்டும் ஹைட்ராக்சி குளோரோகுயின்: உலக சுகாதார அமைப்பு 

DIN


புதுதில்லி: மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) கரோனா தொற்றுக்கு எதிரான ஆய்வில் மீண்டு இணைத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை மீண்டும் கரோனா தொற்றுக்கு எதிரான பரிசோதனையில் மீண்டும் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.  

முன்னதாக மே 25 ஆம் தேதி கரோனா தொற்றுக்கு எதிராக ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை பயன்படுத்துவது குறித்த ஆய்வினை நிறுத்தி வைப்பதாக  உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை எடுத்துக்கொள்ளும் கரோனா நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து இந்த தடையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், கரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பானது அல்ல, இதய நோய் உண்டாகவும்,  உயிரிழப்புகள் அதிகரிக்கவும்  வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவித்ததாலும், ஒற்றுமை சோதனை என்று அழைக்கப்படும் உலகளாவிய மருத்துவர்கள் குழுவில் 35 நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும், பரிசோதனைக்காக 3,500க்கும் அதிகமான நோயாளிகளும் தன்னார்வலர்களாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த தடை மேற்கொள்ளப்பட்டது என  உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஒற்றுமை சோதனை குழுவானது ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவது குறித்த சோதனைகளின் தரவுகளை ஆராய்ந்து வந்தது. இதனை தொடர்ந்து ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை மீண்டும் கரோனா தொற்றுக்கு எதிரான பரிசோதனையில் உட்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், சோதனையில் சோதிக்கப்படும் அனைத்து சிகிச்சை முறைகளின் பாதுகாப்பையும் ஒற்றுமை சோதனை குழுவானது தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மலேரியா தொற்று மற்றும் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை பொது வெளியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் கரேனாவுக்கு எதிராக இந்த மருந்தினை பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததையொட்டி பல நாடுகளும் இந்த மருந்தினை வாங்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT