கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கும் நிலையில், கரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.