தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி பிறந்த நாள் விழா: மரக்கன்றுகளை வழங்கி இளைஞர் காங்கிரஸ் கொண்டாட்டம்

ராகுல்காந்தியின் 50 ஆவது பிறந்த நாள் விழா சேலம் மாவட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

ராகுல்காந்தியின் 50 ஆவது பிறந்த நாள் விழா சேலம் மாவட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.என்.முருகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தென்னை, மலைவேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினார். இதனையடுத்து பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.பி.எஸ்.மணி இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஓ.என் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பி.வெங்கடாசலம், துணைத் தலைவர் வி.சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT