திருப்பூண்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
முக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத வகையில் விலை குறைந்துள்ள நிலையில் கரோனா பெருந்தொற்று நேரத்தில் அநியாயமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ள மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசையும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசையும் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.