கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். 
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி: பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

DIN


கிருஷ்ணகிரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் அனுமன் தீர்த்தத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் கே. கபிலன் தலைமை வகித்தார்.‌ அந்தக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரியில் ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமையிலும், போச்சம்பள்ளியில் மாவட்ட பொறுப்பாளர் என்.வி‌ வெங்கடாசலம் தலைமையிலும், பர்கூரில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ் கண்ணு தலைமையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT