தற்போதைய செய்திகள்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மேலும் ஒரு அலுவலக உதவியாளருக்கு கரோனா

DIN



நாகை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் குறித்து கண்காணிப்பு மற்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சீர்காழி அரசு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. 

தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டாட்சியர், தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் என 80 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தணிமைப் படுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், பரிசோதனையின் முடிவு இன்று புதன்கிழமை வெளியானது. இதில் சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் 40 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் மயிலாடுதுறை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். 80 பேரில் இன்னும் 15 பேருக்கு பரிசோதனை முடிவு வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT