தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே சூதாட்டம் ஆடிய  அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 9 பேர் கைது 

ஆம்பூர் அருகே சூதாட்டம் ஆடிய  அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 9 பேரை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர்.

DIN


ஆம்பூ: ஆம்பூர் அருகே சூதாட்டம் ஆடிய  அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 9 பேரை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உமர்ஆபாத் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சிலர் சூதாட்டம் ஆடுவது தெரிய வந்தது.   அதன் பேரில் செல்வகுமார் , ரபீக் அகமது , பாலாஜி, ஜீவரத்தினம் , ஆசிப், கலையரசன், குப்புசாமி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன், பழனி  உள்ளிட்ட 9 பேரை உமர்ஆபாத் காவலர்கள் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 6 பைக்குகள், 10 செல்போன், ரொக்கம் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏற்கனவே இது போல் சூதாட்டம் ஆடிய போது கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT