முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடல்: மருத்துவ வணிகர்கள் சங்கம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும், கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →