வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் 200வது மின்மாற்றி தொடக்கம்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் 200வது மின்மாற்றி தொடக்கவிழா நடைபெற்றது.
சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் 200வது மின்மாற்றி தொடக்கவிழா நடைபெற்றது.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் சந்தைவெளி பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தால் பல மாதங்களாக அப்பகுதி மக்கள் அவதியடைந்துவந்தனர். குறைந்தமின்னழுத்தத்தால் மின்சாத னப்பொருட்கள் பழுதடைந்து சிரமப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வைத்தீஸ்வரன்கோவில் பிரிவு அலுவலக மேம்பாட்டு திட்டத்தில் 200வது மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு அதன் தொடக்கவிழா செயற்பொறியாளர் எஸ்.சதீஸ்குமார் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், விஜயபாரதி, கூட்டுறவு வங்கி தலைவர் போகர்.சி.ரவி முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ பிவி.பாரதி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம்,நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.