தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் அருகே கோயிலில் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளங்குழந்தை

திருவள்ளூர் அருகே கோயிலில் கூடையில் விட்டுச்செல்லப்பட்ட பிறந்து 10 நாள்களே பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. 

DIN

திருவள்ளூர் அருகே கோயிலில் கூடையில் விட்டுச்செல்லப்பட்ட பிறந்து 10 நாள்களே பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. 

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கொட்டையூர் ஊராட்சியில் அடங்கிய நரசமங்கலம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் இக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெயில் வாட்டியதால் கோயில் மரத்தடியில் ஒதுங்கினார்களாம். அப்போது, அங்கு பச்சிளம் குழந்தை அழுகை சத்தம் கேட்டதாம். 

அதைத் தொடர்ந்து அருகில் சென்று பார்க்கையில் பிளாஸ்டிக் கூடையில் பிறந்த 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தோர் வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் மப்பேடு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்களாம். அதன் பேரில் விரைந்து சென்ற வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பச்சிளம் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த நிலையில் பிறந்த சில நாள்களே ஆன ஆன குழந்தையை பிளாஸ்டிக் கூடையில் வைத்து விட்டுச் சென்ற பெண் மர்ம நபர் குறித்து மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT