மாரியம்மன் கோயில் கடைத்தெருவில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  
தற்போதைய செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கடையடைப்பு உண்ணாவிரதம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

DIN


தஞ்சாவூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

வணிகர் சங்கம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தையொட்டி, மாரியம்மன் கோயில் கடைத்தெருவில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

மேலும் அதே பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வணிகர்கள், திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்தும்,  அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டம் மாலை வரை தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT