முகப்பு
தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி காவலர் பலி

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை மின்சாரம் தாக்கி காவலர் உயிரிழந்தார்.

தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி காவலர் பலி

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை மின்சாரம் தாக்கி காவலர் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை மின்சாரம் தாக்கி காவலர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தருமர் மகன் காளிமுத்து (23). இவர் 2018 ஆம் ஆண்டில் காவல் துறையில் இணைந்தார். மதுரையில் பயிற்சி முடித்த பிறகு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் ஆயுதப்படையில் பணியில் சேர்ந்தார். 

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த இவர் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை குளிப்பதற்காக வாளியில் தண்ணீரை நிரப்பி எலக்ட்ரிக் ஹீட்டர் கருவி மூலம் வெந்நீர் தயார் செய்துகொண்டிருந்தார். அப்போது, எலக்ட்ரிக் ஹீட்டர் கருவியைத் தொட்ட இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால்,  காளிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →