தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

DIN

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றுக்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டியுள்ளதாக வாஷிங்டன் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளனர், இதையடுத்து அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறிப்பட்டார். அதிலிருந்து இதுவரை வாஷிங்டன் மாகாணத்தில் சுமார் 267 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நல்வாழ்வுத் துறை செவ்வாய்க்கிழமை அறிவிப்பொன்றில் தெரிவித்தது. 

வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டல் புறநகர்ப் பகுதியான கிங் கவுன்ட்டியில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர், அங்கு 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இப்போது 900-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT