தற்போதைய செய்திகள்

போடியில் தடை விதிகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

DIN


போடி: போடியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் விதிகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

     கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பலசரக்கு கடைகள், பால், மருந்து கடைகள் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கடைகளிலும் பொதுமக்களை கூட்டமாக நிற்க வைக்காமல் தனித்தனியாக இடைவெளி விட்டு நிறுத்தி வைத்துதான் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

     ஆனால் போடியில் சில பலசரக்கு கடை, உணவு கடைகளில் விதிகளை மீறி பொதுமக்களை கூட்டமாக நிறுத்தி வைத்தும், இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்தும் பொருட்களை விற்பனை செய்ததாக தெரியவந்தது. 

இதனையடுத்து போடி நகர் காவல்நிலைய போலீஸார் போடியில் பலசரக்கு கடைகள் வைத்து நடத்தும் பெரியாண்டவர் நெடுஞ்சாலையை சேர்ந்த ரமேஷ்குமார் (46), சேனைத்தலைவர் சுதந்திர மகால் அருகே உள்ள தனசேகரன் (56) ஆகியோர் மீது புதன் கிழமை இரவு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

   இதேபோல் போடியில் உணவு கடைகள் திறந்து வைத்திருந்த போடி தேவாரம் சாலையை சேர்ந்த பிச்சைராஜா (46), டி.வி.கே.கே.நகரை சேர்ந்த அப்துல் ஹன்னா (63), பெரியாண்டவர் நெடுஞ்சாலையை சேர்ந்த பாண்டி சக்தி (29) ஆகியோர் மீது புதன் கிழமை இரவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவாரத்தில் காவல்துறை எச்சரிக்கையை மீறி 144 தடை உத்திரவை மதிக்காமல் சுற்றித் திரிந்த  டி.மேட்டுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (35), தேவாரத்தை சேரந்த ராஜேஷ் (25), போடியை சேர்ந்த  விவேக் (25) ஆகியோர் மீது தேவாரம் காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT