தற்போதைய செய்திகள்

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,200 ஆக உயர்வு

DIN


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 200 ஆக ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உலகம் முழும் 180 நாடுகளுக்கு மேல் வைரஸ் தொற்று பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை அதிகப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 21,200 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் 4,22,566-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1027 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மதுரையில் ஒருவர்  உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 

தீவிரம் அடைந்து வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரமால் இருப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT