தற்போதைய செய்திகள்

நாமக்கல் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து

DIN

நாமக்கல்: கரோனா  தொற்று பாதிக்கப்பட்டோர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கரரோனா தொற்றால் 77 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம், கரூர், நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் பூரண குணமடைந்ததை அடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் சுமார் 700 தூய்மைப் பணியாளர்களுக்கு வியாழக்கிழமை நகராட்சி சார்பில் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஆடு, கோழி, மீன், முட்டை, முட்டை இறைச்சி வகைகளும், சைவ உணவுகளும் பரிமாறப்பட்டன.

நாமக்கல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே பி. பி. பாஸ்கர் இதனைத் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் தொற்று வராதவாறு நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஆணையர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT