தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் 7 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்த குடிப்பிரியர்கள்

DIN


காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில்  அதிகாலை 7 மணியிலிருந்தே மது வாங்க பலரும் வரிசையில் காத்திருந்தனர். 

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் மொத்தம் உள்ள மதுக்கடைகள் 23 இல் 13 மதுக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. 10 மதுக்கடைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்ததால் அவை திறக்கப்படவில்லை பெரும்பாலான மதுக்கடைகளில் வெயிலின் தாக்கம் காரணமாக மது வாங்க வந்திருந்த பலரும் கையில் குடை பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாத பலரும் அவர்கள் நிற்க வேண்டிய இடத்தில் காலணிகளை வைத்துவிட்டு அருகில் காத்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டு அந்த ஒரு டோக்கன் இல் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பலரும் மதுபாட்டில்களை அதிகமான அளவில் வாங்கி சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT