தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 

DIN

தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில்  தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தொடர்ந்து காற்று பலமாக வீசும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேபோன்று கடலூர்,புதுச்சேரி துறைமுகத்திலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணிக்கு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT