தற்போதைய செய்திகள்

சவுதி அரேபியாவில் தொற்று பாதிப்பு 52 ஆயிரத்தை கடந்தது

DIN

ரியாத்: சவூதி அரேபியாவில் புதிதாக 2,840 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52,016 -ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளதாவது:  சவூதி அரேபியாவில் புதிதாக 2,840 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52,016 -ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் மேலும்  10 பேர் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது, 1,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,666 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பு உலக அளவில் வர்த்தகத்தில் தீவிர மாற்றங்களை தொடர்ந்து ஏற்படுத்தும், வணிக வடிவத்தை மாற்றியமைக்கும் என்று சவுதி கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பண்டார் பின் இப்ராஹிம் அல்-காரேஃப் சமீபத்தில் தெரிவித்ததாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT