தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது

DIN

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது.

உலகம் முழுவதும் இதுவரை தொற்று தாக்குதலுக்கு 3,24,970 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் புதிதாக சுமார் 94 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,89,197ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 15,70,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 93,533-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் மட்டும் ஒரே நாளில் 9, 263 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 99 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது, 2,893 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 ஆயிரத்து 778 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,886 ஆக உயர்ந்தது. இங்கிலாந்தில் 2,48,818 பேரும், இத்தாலியில் 2,26,699 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த,19,60,472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 2,658,324 பேரில் 45,431 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 5,611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் இதுவரை 3,303 பேர் பலியாகியுள்ளனர், தொற்று பாதிக்கு 61,149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உயர்வு 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT