தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டி அருகே தனிமைபடுத்தப்பட்ட முகாமில் நெஞ்சு வலியால் ஒருவர் பலி

DIN


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே  தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து கடந்த மே 19-ம் தேதி தேனி மாவட்டத்திற்கு வந்த, பாலக்கோம்பையைச் சேர்ந்த வேலுச்சாமி (45) என்பவர், ஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வேலுச்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி அளித்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT