தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரண பணியின்போது விபத்தில் சிக்கி வருவாய் ஆய்வாளர் பலி

DIN

திருச்சி: கரோனா நிவாரண பணியின்போது வாகன விபத்தில் சிக்கி வருவாய் ஆய்வாளர் பி. சேகர் (51) உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, ஈமச் சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்கினார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பி.சேகர் (51). இவருக்கு மனைவி வளர்மதி, 10ஆம் வகுப்பு பயிலும் மகன் பரத் ஆகாஷ் ஆகியோர் உள்ளனர். புதன்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்ற பி.சேகர், வரதராஜபுரம் பகுதியில் கரோனா நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக சென்றிருந்தார். அங்கு பணிகளை முடித்து முடக்குச் சாலை வழியாக வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்தக் காயமடைந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். இங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், வியாழக்கிழமை உயிரிழந்தார். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மருத்துவமனைக்கு நேரில் வந்து வருவாய் ஆய்வாளரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். ஈமச் சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் அளித்தார். 

மேலும், கரோனா பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்ளுக்கான ரூ.50 லட்சம் வழங்கவும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். 

திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே, கரோனா பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2ஆவது ஒரு வருவாய் ஆய்வாளர் உயிரிழந்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT