தற்போதைய செய்திகள்

அதிமுக சார்பில் ஓலக்கசின்னானூரில் 300 கூலித்தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கல்

DIN

சங்ககிரி: அதிமுக சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஓலக்கசின்னானூரில் 300  கூலித்தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றன. 

கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மே 31 -ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளன. இதனையடுத்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவினையடுத்து அதிமுக சார்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஒலக்கசின்னானூர் ஊராட்சிக்குள்பட்ட 300  கூலித்தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள்  உள்ளிட்ட உணவுப்பொருள்களை சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலர் கே.வெங்கடாஜலம் தலைமை வகித்து வழங்கினார். சங்ககிரி ஒன்றியச் செயலர் என்சிஆர். ரத்தினம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம்,  துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன்,  அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, ஒலக்கசின்னானூர் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் கே.ராஜேஷ் என்கின்ற ராஜா, தங்காயூர் ஊராட்சி மன்றத்தலைவர் பாலாஜி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT