தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் கரோனாவிலிருந்து குணமடைந்த 4 பேர் வீடு திரும்பினர்

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் வீடு திரும்பினர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 109  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். இன்று காலை நிலவரப்படி 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் இன்று ( 23.5.2020 ) பிற்பகலில் வீடு திரும்பினர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், மருத்துவமணை நிர்வாகம் காலை தெரிவித்துள்ள  கணக்கீட்டின் படி 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை,  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் பழங்களை கொடுத்து, 14 நாள்கள் வீடுகளில் இருவரும் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT