தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது

DIN

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 54,04,382 லட்சத்தை கடந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்காத நிலையில், தொற்று பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வல்லரசான அமெரிக்கா பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், உலகம் அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 54,04,382 லட்சத்தை  கடந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,47,234 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 3,43,975 பேர் பலியாகியுள்ளனர். 

தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 27,59,611 பேர்களில் 53,562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தொற்று பாதிப்பும், பலியும் நிகழ்ந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பிரேசில், ரஷ்யாவில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT