தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்குகிறது

DIN

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,89,560 -ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, இன்று 200 நாடுகளுக்கு மேல் பரவி பாதிப்பையும், பலியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், உலக அளவில் இதுவரை 57,89,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கரோனா தரவு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 57,89,560 -ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 24,97,605 -ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,57,432 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் 28,81,548 பேர்களில், 52,975 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கரோனா தொற்று தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 17 லட்சத்து 45 ஆயிரத்து 803 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,02,107 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர், அதே நேரத்தில் 4,90,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT