தற்போதைய செய்திகள்

வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? : உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாக கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கூறியதாவது:

தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டிக் தமிழ் இருக்கும்? என கேள்விகள் எழுப்பினர்.

மேலும் தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என கூறி தீர்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மதுரையை சார்ந்த சக்திராவ் தொடுத்த வழக்கில், இடஒதுக்கீடு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டும் பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT