தற்போதைய செய்திகள்

பும்ரா வேகத்தில் சுருண்டது தில்லி: இறுதிப் போட்டிக்கு சென்றது மும்பை

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய தில்லி அணியின் தொடக்க வீரர்களாக தவான், ப்ரித்வி ஷா களமிறங்கினார்கள்.

முதல் ஓவரை வீசிய போல்ட் 2வது பந்தில் ஷாவையும், அடுத்து களமிறங்கிய ரகானேவை 5வது பந்திலும் டக் அவுட்டாக்கி தில்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் தவானையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் பும்ரா. 

அடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் ஸ்ரேயஸ் சற்று நிதானமாக ஆடிக்கொண்டுருக்கும் போது ஸ்ரேயஸை 12 ரன்களில் வெளியேற்றினார்கள்.

தொடர்ச்சியாக களமிறங்கிய பண்ட் (3), டேனியல் (0) வெளியேறினார்கள். சற்று நிதானமாக ஆடிய ஸ்டோனிஸ் (65), அக்சர் (42) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ரபடா 15 ரன்களுக்கு அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT