தற்போதைய செய்திகள்

குவைத் நாடாளுமன்ற வலைதளத்திற்குள் ஊடுருவியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

குவைத் நாட்டின் நாடாளுமன்றத்தின் வலைதளத்திற்குள் ஊடுருவிய நபருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தேசிய சட்டமன்ற ஊழியர் ஒருவர் குவைத் நாடாளுமன்ற நிர்வாகியின் கணக்கை முடக்கியுள்ளார்.

அவர் கணக்கை முடக்கி அதன்மூலம் வைரஸை நாடாளுமன்ற வலைதளத்தை கைப்பற்றும் திட்டத்தை நாடாளுமன்ற இணையக் குழு முறியடித்தது.

பின், அந்த நபரை நாடாளுமன்றத்தின் வலைப்பின்னல் மற்றும் மின்னஞ்சலில் சட்டவிரோதமாக ஊடுருவியதற்காகவும், நிர்வாகியின் கணக்கை முடக்கியதற்காகவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனைக்கு பிறகு நாடு கடத்தவும் உத்தரவிட்டது.வைரஸ்களை அனுப்புவதன் மூலம் சட்டமன்றத்தின் வலையமைப்பை முடக்குவதற்கான நோக்கத்திற்காக பிரதிவாதி ஹேக்கிங் திட்டங்களைப் பயன்படுத்தினார், ஆனால் சட்டசபையின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் அவரை அம்பலப்படுத்திய பின்னர் குற்றவாளியின் முயற்சி தோல்வியடைந்தது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT