முகப்பு
தற்போதைய செய்திகள்

‘தில்லியில் கரோனா வேகமாகப் பரவுகிறது’: எய்ம்ஸ் இயக்குனர்

தில்லியில் கரோனா வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் கரோனா வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் குறித்து அவர் கூறியதாவது,

தில்லியில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதால் வேகமாக பரவி வருகின்றது. இந்த பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனாவின் மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என மாநில முதல்வர் அறிவித்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாள்களாக தில்லியில் உள்ள சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் வந்து செல்கின்றனர்.

இதனால், தில்லியில் கரோனா பரவல் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →