முகப்பு
தற்போதைய செய்திகள்

வெறிச்சோடிக் காணப்பட்ட சபரிமலை

கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று(திங்கள்கிழமை) திறக்கப்பட்ட சபரிமலை பக்தர்களின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
சுவாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்
பகிர்:

கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று(திங்கள்கிழமை) திறக்கப்பட்ட சபரிமலை பக்தர்களின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் சுவாமியின் நடை, பக்தர்கர்களின் தரிசனத்திற்காக ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். அந்த மூன்று மாதங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவார்கள்.

இதையடுத்து நடப்பாண்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இன்று காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

கரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு நெறிமுறைகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

சபரிமலை செல்லும் பக்தா்கள் முதலில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 1,000 பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். இணையதளத்தில் முதலில் பதிவு செய்யும் பக்தா்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவா் என பல்வேறு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.

வெறிச்சோடிக் காணப்பட்ட சபரிமலை சன்னிதானம்

மேலும், சபரிமலை செல்லும் பக்தா்கள் அனைவரும் தரிசனத்துக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும். 10 வயதுக்கு கீழ் உள்ளவா்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு அனுமதி கிடையாது. சா்க்கரை நோய் போன்ற இணை வியாதிகள் உள்ளோா் யாத்திரை செல்வதற்கு கண்டிப்பாக தடை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாள்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து சென்ற இடம், தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →