முகப்பு
தற்போதைய செய்திகள்

நிவர் புயல்: தமிழகத்தில் 6 ரயில்கள் ரத்து

நிவர் புயல் தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் நிலையில் தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
கோப்புப்படம்
பகிர்:

நிவர் புயல் தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் நிலையில் தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் - மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் 6 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உழவன் விரைவு மற்றும் சோழன் விரைவு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது, மேலும் மைசூரிலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயில், திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →