முகப்பு
தற்போதைய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து : தொடர் சிகிச்சையில் 2 பேர்

கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கோழிக்கோடு விமான விபத்து
பகிர்:

கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜீவ் பன்சால் கூறுகையில், 

கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில்  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

துபையிலிருந்து கோழிக்கோடுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உள்பட 21 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.