முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் ரூ.15 ஆயிரம் கோடியில் 16 நெடுஞ்சாலைகள் : மத்திய அரசு

ஆந்திர மாநிலத்தில் ரூ. 15,592 கோடி மதிப்பில் 16 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு விரைவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் ரூ. 15,592 கோடி மதிப்பில் 16 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு விரைவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

ஆந்திர பிரதேச மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ரூ. 15,592 கோடி மதிப்பில் 16 தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் 1,411 கி.மீ.க்கு அமைக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.